Our Feeds


Saturday, March 11, 2023

SHAHNI RAMEES

ஹரக் கட்டா கைது. | மடகஸ்கர் செல்லவுள்ள CID குழு...!

 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் நாளை (11) மடகஸ்கர் நோக்கி பயணிக்கவுள்ளனர்.



மடகஸ்கரில் கைது செய்யப்பட்ட ´ஹரக் கட்டா´ மற்றும் ´குடு சலிந்து´ ஆகிய இரு போதைப்பொருள் கடத்தல்காரர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நோக்கிலேயே அவர்கள் பயணிக்கவுள்ளனர்.



குறித்த இருவர் உள்ளிட்ட 8 பேர் கடந்த முதலாம் திகதி மடகஸ்கரில் உள்ள இவாடோ விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஹரக் கட்டாவின் மனைவியும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.



ஹரக் கட்டா உள்ளிட்ட 05 பேர் பெப்ரவரி 12 ஆம் திகதி தனியார் ஜெட் விமானம் மூலம் நாட்டின் விமான நிலையத்தை வந்தடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »