ரயில்வே திணைக்களத்திலுள்ள அனைத்து ஊழியர்களது விடுமுறைகளும் மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று முதல் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவிக்கின்றது.
ரயில்வே ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்த பின்னணியிலேயே போக்குவரத்து அமைச்சு இந்த அறிவிப்பை பிறப்பித்துள்ளது.