இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலொ பால்மாவின் விலையை 200 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலையை 80 ரூபாவாலும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த விலைக் குறைப்பு எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வருமென பால்மா இறக்குமதியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.