சட்டக் கல்லூரி பரீட்சையை ஆங்கில மொழியில் மாத்திரமே நடத்த வேண்டும் என கொண்டு வரப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், பாராளுமன்றத்தில் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது.
சட்டக் கல்லூரி பரீட்சையை ஆங்கில மொழியில் மாத்திரமே நடத்த வேண்டும் என அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வர்த்தமானியின் ஊடாக, மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது என பல்வேறு தரப்பினரும், நீதி அமைச்சரிடம் கோரியிருந்தனர்.
இதனால், இந்த பரீட்சையை மூன்று மொழிகளிலும் நடத்துவற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துமாறும் அவர்கள், நீதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன்படி, இந்த யோசனை இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இவ்வாறு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி மாத்திரமே சார்பாக வாக்களித்திருந்தார்.
இதன்படி, குறித்த யோசனை 113 வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.