இலங்கையில் அண்மை நாட்களாக நிலநடுக்கங்கள் பதிவாகி வரும் நிலையில், இன்று அதிகாலையும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்கள் குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கையானது இந்திய – அவுஸ்திரேலிய தட்டுக்கும் மேலே அமைந்துள்ள ஆசிய தட்டுக்கும் இடையில் நேற்று பகல் முழுவதும் பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அதன் சிரேஷ்ட புவியியலாளர் தனுஷ்க ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
“இலங்கையில் இயங்கி வரும் 4 நில அதிர்வு அளவீடுகளும் இந்த நிலநடுக்கத்தை பதிவு செய்திருந்தாலும், பொதுமக்கள் எங்களிடம் எந்தவிதமான முறைப்பாடும் செய்யவில்லை.
இந்த நிலநடுக்கங்கள் பற்றிய ஆய்வில் நாம் குறிப்பிடக்கூடிய காரணிதான் நேற்று நாள் பூராகவும் இலங்கை அமைந்துள்ள இந்திய-அவுஸ்திரேலிய தட்டு மற்றும் மேலே உள்ள ஆசிய தட்டுக்கு இடையே 4-5 ரிக்டர் அளவில் பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
அந்த நிலநடுக்கங்களின் அதிர்வே இலங்கை எல்லையில் உணரப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள தேவையில்லை. என்றார்.