Our Feeds


Monday, March 13, 2023

ShortNews Admin

BREAKING: விமல் வீரவன்சவை கைது செய்ய கொழும்பு, பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை!



இளவரசர் அல்-ஹுசைன் இலங்கை வந்தபோது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் 07 பேருக்கு எதிராக கறுவாத்தோட்டம் பொலிஸாரால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (13) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜராகத் தவறியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் பிடியாணை பிறப்பித்துள்ளார்.


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே, இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.


விமல் வீரவங்ச, ஜயந்த சமரவீர, வீரகுமார திஸாநாயக்க, ரொஜர் செனவிரத்ன, மொஹமட் முஸம்மில், பியசிறி விஜேநாயக்க ஆகிய 7 பேர் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையில், பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் இவ்வாறு பிடியாணை பிறப்பித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »