நஷ்டத்தில் இயங்கும் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வெளிநாட்டு முதலீட்டாளரிடம் ஒப்படைப்பதற்கான முன்மொழிவுகள் கோரப்படுவதாக துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
விமான நிலைய நிர்வாகத்தை எப்படி முதலீட்டாளரிடம் ஒப்படைப்பது என்று ஆலோசித்து வருகின்றதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்மாணப்பணிகள் 2009 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது ஆரம்பிக்கப்பட்டு 2013 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.