நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் இன்று 6.9 ரிச்டர் அளவில் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 152 கிமீ (94 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்திற்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ள நிலையில் உடனடி பாதிப்பு விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.