பொது மக்களுக்கு வங்கி சேவைகளை வழங்குவதற்காக தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து துறைகள் உட்பட 265 கிளைகள் வழமை போன்று இயங்குவதாக இலங்கை வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை வங்கியின் பொது முகாமையாளர் ரசல் பொன்சேகா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியாக உள்ள 340 மக்கள் வங்கிக் கிளைகளில் 272 கிளைகள் முழுமையாக இயங்கி வருவதாக மக்கள் வங்கியின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி கிளைவ் பொன்சேகா உறுதிப்படுத்தியுள்ளார்.