"Zahirian 84 குழுமம்" ஏட்பாட்டில் சனீரா ரவூப் எழுதிய கன்னிக் கவிதை நூலான 'நினைவுகளின் நிஜங்கள்' நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு கம்பளை சாஹிரா கல்லூரி மஹ்மூத் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நூலாசிரியர் சனீரா ரவூப் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக சமூக செயல்பாட்டாளர் பஸ்லான் பாரூக் கலந்து சிறப்பித்ததுடன், நூல் ஆசிரியரிடமிருந்து முதல் பிரதியையும் பஸ்லான் பாரூக் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
நிகழ்வுக்கு கெளரவ அதிதியாக பிரபல பெண் எழுத்தாளர் திருமதி நயீமா சித்திக், மற்றும் விஷேட அதிதிகளாக அசீம் அக்பர் அமைப்பின் தலைவர் அசீம் அக்பர், AZDA அமைப்பின் செயலாளர் திரு. பசான் மொஹமட், ITSF நிறுவனத்தின் பணிப்பாளர் பைஸல் ஆசிரியர் மற்றும் எழுத்தாளர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.