அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்ட ஜெர்மன் ஜனாதிபதி ஸ்கால்ஸ் உக்ரைன், ரஷ்ய போர் குறித்து கீழ் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
சி.என்.என். செய்தி நிறுவனத்திற்கு ஜனாதிபதி ஸ்கால்ஸ் அளித்த நேர்காணலில், உக்ரைனில் நடந்து வரும் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக ஆயுதங்களை சீனா வழங்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். ஆனால், சீனா அப்படி செய்யாமல் அதில் இருந்து விலகி இருக்கும் என்றே நான் நேர்மறையாக எண்ணுகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
ஒருவேளை ரஷ்யாவுக்கு ஆயுதங்களை சீனா வழங்கினால் அந்நாடு மீது தடை விதிப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், அதுபோன்று நடக்க கூடாது என நாங்கள் தெளிவுப்பட கூறி வருகிறோம். இந்த விவகாரத்தில் எங்களது கோரிக்கை வெற்றி பெறும் என்று நல்ல முறையிலேயே எண்ணுகிறேன்.
ஆனால், இந்த விசயத்தில் நாங்கள் கவனம் செலுத்தி, மிக மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லையெனில் சீனா அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார்.
எனினும், எதுபோன்ற விளைவுகள் என்ற விவரங்களை பற்றி அவர் விரிவாக விளக்கவில்லை. ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மன் மிக பெரிய பொருளாதார நாடாக உள்ளது.
சமீப ஆண்டுகளாக ஜெர்மனியுடன் தனிப்பட்ட முறையில் மிக பெரிய அளவில் வர்த்தக நடைமுறைகளை மேற்கொள்ளும் நாடாகவும் சீனா இருந்து வருகின்றது.