உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பான தீர்ப்பில் வழங்கப்பட வேண்டிய சுமார் 10 கோடி ரூபா இழப்பீட்டை வழங்குவதற்காக இந்த நாட்களில் பணம் சேகரித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க இன்னும் 3 மாதங்களே உள்ளதாக காலி - பத்தேகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காகவும், பொறுப்பை தவறவிட்டதற்காகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 கோடி ரூபா இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.