இம்ரான் கானைக் கைது செய்வதற்காக நள்ளிரவில் அவரது இல்லத்தின் மீது பாகிஸ்தான் பொலிஸார் இடைவிடாத தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டுக்கு வெளியே கலவரம் வெடித்துள்ளது.
இஸ்லாமாபாத் நீதிமன்றத்தைச் சேர்ந்த பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கில், இஸ்லாமாபாத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் இம்ரான் கானுக்கு பிணையில் வெளிவர முடியாத கைது பிடியாணை பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், இம்ரான் கானை கைது செய்வதற்காக அவரது வீடு அமைந்துள்ள ஜமான் பூங்கா அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.