இலங்கைக்கான கடன் நிவாரணம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இன்று கூடவுள்ளது.
இதன்போது எடுக்கப்படும் தீர்மானங்களை நாளைய தினம் இடம்பெறும் செய்தியாளர் சந்திப்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான கடன் நிவாரணத்தை இலங்கை எதிர்ப்பார்த்துள்ளது.
குறித்த கடன் நிவாரண உத்தரவாதத்தினை சர்வதேச நாணய நிதியம் வழங்கும் பட்சத்தில், முதல் கட்டமாக இலங்கைக்கு 390 மில்லியன் டொலர் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மூடுவது அல்லது மறுசீரமைப்பது போன்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு நீண்ட கடன் வசதியை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.