எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து பாடசாலை வேன்களின் கட்டணத்தை குறைப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல் ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், சதவீத ரீதியில் விலைக் குறைப்பை மேற்கொள்வது கடினம் எனவும் எனவே பேசி விலையை தீர்மானிக்க வேண்டும் என்றார்.