அனைத்து முதலாம் தரப் பிள்ளைகளுக்கும் ஆங்கில மொழி கற்பித்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கங்கொடவில சமுத்திராதேவி மகளிர் ஆரம்பப் பாடசாலையில் இன்று (30) முதலாம் தரப் பிள்ளைகளுக்கான ஆங்கில மொழிப் பாவனையை ஆரம்பிக்கும் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அதற்குத் தேவையான சுமார் 13,800 ஆரம்ப ஆசிரியர்கள் இதுவரை பயிற்சி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.