அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து இலங்கைக்கு பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர், மதுபோதையில் விமானப் பணிப்பெண்ணை மிரட்டிய குற்றச்சாட்டில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபரை நேற்று (22) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, குறித்த சந்தேக நபர் விமான போக்குவரத்து சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ், சந்தேக நபரை 10 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.