ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியிலிருந்து பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசமும் குறித்த பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ஜீ.எல்.பீரிஸ் நீக்கப்படுவார் என்பது வேடிக்கையானது. கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயற்படும் சாகர காரியவசம் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.