வரும் ஏப்ரல் மாதமளவில் எரிபொருள் விலை குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், மக்கள் நிம்மதி அடைவார்கள் எனவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (21) கருத்து வெளியிடும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், டிசம்பர் மாதம் மின்கட்டணத்துக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர,
“கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. மேலும் ரூபாயின் மதிப்பும் வலுவடைந்து வருகிறது. எரிபொருள் விலையில் நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி எனக்கு ஏற்கனவே பணிப்புரை விடுத்துள்ளார். அந்தச் சலுகைகளை வழங்குகிறோம்’’ என்றார்