பழுதடைந்தவை என சந்தேகிக்கப்படும் சுமார் ஒரு இலட்சம் முட்டைகள் ஒரு வாரத்துக்குள் கொண்டு வரப்பட்டு மஹகும்புக்கடை வல்பலுவ வனப் பிரதேசத்தில் கொட்டப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் புத்தளம் மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதேசிவாசி ஒருவர் தமது அலுவலகத்துக்கு இது தொடர்பில் அறிவித்ததையடுத்து இதனைக் கண்டுபிடித்ததாக நுகர்வோர் அதிகார சபையின் புத்தளம் மாவட்ட அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.