உணவகங்களில் சிற்றுண்டிகளின் விலைகள் குறைக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
விலை குறைக்கப்படும் உணவுப்பொருட்களின் விபரங்கள் இன்று (09) அறிவிக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நேற்று (08) முதல் அமுலாகும் வகையில் கோதுமை மாவின் விலையை 15 ரூபாவினால் குறைப்பதற்கு ப்ரீமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.