கொலன்னாவ சிங்கபுர பகுதியில் நேற்று (30) இரவு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரை விடுவிக்க முற்பட்ட குழுவினர் மீது வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அவர்களைக் கலைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு குற்றப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க உட்படலான குழுவினர் கொலன்னாவ சிங்கபுர விளையாட்டரங்கம் பகுதியில் கடமைகளில் ஈடுபட்டிருந்தபோது ஒருவர் எதையோ எறிவதை பொலிஸ் அதிகாரிகள் கண்டுள்ளனர்.
இதனையடுத்துசந்தேக நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுவர முற்பட்ட போது உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் பொலிஸ் ஜீப்பை சுற்றிவளைத்து சந்தேக நபரை பொலிஸாரின் பிடியிலிருந்து மீட்க முயற்சித்துள்ளனர்.
இதனையடுத்தே வானத்தை நோக்கி சுட்டு கூட்டத்தை கலைத்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டினால் எவருக்கும், உடமைகளுக்கும் சேதம் ஏற்படவில்லை.கைது செய்யப்பட்டவர் 44 வயதுடையவர்.