போராட்டத்தின் போது கொள்ளுப்பிட்டி ஐந்தாம் தடத்தில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் கோட்டே மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
புறக்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் வீட்டிற்கு தீ வைக்க சதி செய்தமை, உதவி மற்றும் ஆதரவு, வழங்கியமை உள்ளிட்டவை தொடர்பில் தெரியவந்த தகவலுக்கு அமைய, சந்தேகநபர் நேற்று (27) இரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.