அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் உறவினரும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் மகனும் இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்களில் இரண்டு முக்கிய பதவிகளுக்கு போட்டியிடுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இலங்கை வெளிநாட்டுத் தூதரகங்களில் தற்போது 98 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
இந்த பதவிக்கு தமது உறவினர்களை நியமிக்குமாறு வெளிவிவகார அமைச்சுக்கு அரசியல்வாதிகளால் அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் இதனால் வெளிநாட்டுச் சேவையில் உள்ள பணியாளர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.