Our Feeds


Friday, March 31, 2023

ShortNews Admin

நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்டம் நாளை ஆரம்பம்!



நுவரெலியாவில் வருடாந்தம் நடைபெறும் ஏப்ரல் வசந்தக்கால நிகழ்வுகள் நாளை முதலாம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகும்.


இதனை தொடர்ந்து எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை தினந்தோறும் கலை கலாச்சார விளையாட்டு போட்டிகளும் மலர் கண்காட்சி போடிகளும் நடைபெறும்.


நுவரெலியா மாநகரசபை விசேட ஆணையாளர் சுஜீவா போதிமான தலைமையில் நாளை ஏப்ரல் முதலாம் திகதி நுவரெலியா கிறகறி வாவிக்கு அருகாமையில் பாடசாலை மாணவமாணவிகளின் பேண்ட்வாத்திய அணிவகுப்பு மறியாதையுடன் வசந்தக்கால நிகழ்வுகள் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்படும்.


விசேட நிகழ்வுகளாக எதிர் வரும் ஏப்ரல் 8, 9 ஆம் திகதிகளில் மாகாஸ்தோட்ட மலை ஏறும் மோட்டார்காரோட்டப் போட்டியும், 10,11 சிங்கல் றீ மலை ஏறும் போட்டியும்,15, 16 ஆம் திகதிகளில் மோட்டகுரோஸ் ஓட்டப்போட்டியும், 15, 23 ஆம் திகதிகளில் குதிரைப்பந்தய போட்டியும் 17, 18 ஆம் திகதிகளில் நுவரெலியா விக்டோரியா பூங்காவில் மலர் கண்காட்சி போட்டியும், 21, 22 ஆம் திகதிகளில் நுவரெலியா வாவி கரைசேற்றில் 4*4 ஜீப் ஓட்டப்போட்டியும், 22, முதல் 30 ஆம் திகதி வரை நுவரெலியா மாநகரசபை விளையாட்டு உள்ளகரங்கில் அகில இலங்கை (பெட்மிடன்) பூப்பந்தாட்டம் போட்டியும் உட்பட பல நிகழ்ச்சிகள் வசந்தகாலத்தை முன்னிட்டு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


கடந்த வருடங்களை விட இம்முறை பெருந்திரளான சுற்றுலா பயணிகள் வருகை தருவாகள் என எதிர்பார்க்கப் படுகிறது. நுவரெலியாவிலுள்ள சுற்றுலா ஹோட்டல்களிலும் சுற்றுலா விடுதிகளிலும் முன்கூட்டியே பதிவுகள் செய்துள்ளதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.


நுவரெலியாவில் ஏப்ரல் வசந்த காலத்தை கழிப்பதற்காக வருகைதரவிருக்கும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அடிப்படை வசதிகளை நுவரெலியா மாநகரசபை செய்து கொடுப்பதற்கும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக நுவரெலியா பொலிஸார் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளதும் குறிப்பிடதக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »