சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட நிபந்தனைகளை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கோரிநின்றார்.
இந்த கேள்விக்கு பதிலளித்த சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த, சுமார் 19 கேள்விகளை கேட்டுள்ளார். அதனைத்தும் வெவ்வேறு அமைச்சுகளுடன் தொடர்புடையவை ஆகையால், எதிர்க்கட்சி தலைவரின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு இரண்டொரு நாட்களை தருமாறு கேட்டுக்கொண்டார்.