நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்வதற்கு இலங்கையை தொழில் முனைவோர் நாடாக மாற்ற வேண்டும் என தொழிலதிபர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
“நோக்கம்” கருத்தரங்குகளின் மற்றுமொரு கட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தொழில்களை நடத்தும் வகையில் இலங்கை மக்களை ஆக்கப்பூர்வமான தொழில்முனைவுக்கு வழிநடத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் " நோக்கம் - இனியொரு விதி செய்வோம்" கருத்தரங்கின் மற்றுமொரு கட்டம் நேற்று (11) இரத்தினபுரியில் நடைபெற்றது.
இதற்கு, அப்பகுதியைச் சேர்ந்த இரத்தினக்கல் வியாபாரிகள் உட்பட ஏராளமான தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.
அங்கு பேசிய தொழிலதிபர் திரு.திலித் ஜயவீர,
"நாம் முயற்சி செய்ய வேண்டியது, இயற்கையிலிருந்து பெறப்பட்ட வளங்களை தேசிய நலனுக்காக எவ்வாறு பயன்படுத்துவது என்று. அந்த நேர்மறையான உரையாடலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் மற்றும் இந்த ஆக்கப்பூர்வமான தொழில் முனைவின் பங்கேற்பாளர்களுடன் இணைந்து இணைந்து செயற்பட தயாராக உள்ளோம். இது எங்களால் செய்யக்கூடிய ஒன்று.