Our Feeds


Thursday, March 30, 2023

News Editor

சூரியனால் பூமிக்கு ஏற்பட போகும் பேராபத்து குறித்து நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்


 சூரியனின் அமைப்பு மற்றும் செயற்பாடு ஆகியவற்றை நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம் ஆய்வு செய்து வருகின்றது. 


இந்த ஆய்வின் மூலம் அதிர்ச்சி தரும் விஷயம் ஒன்று சமீபத்தில் தெரிய வந்துள்ளது. சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவிலான கருமையான பகுதி தென்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.


இது கரோனா ஓட்டை என விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகின்றது. பார்ப்பதற்கு சூரியனின் ஒரு பகுதி காணாமல் போயுள்ளது போன்று தென்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த கரோனா ஓட்டையை சூரியனின் தென்துருவ பகுதியருகே கடந்த 23-ம் திகதி நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம் கண்டறிந்துள்ளது.


இதனால், புவிகாந்த புயல்கள் அல்லது சூரிய காற்று ஏற்பட கூடும் என்று அமெரிக்காவின் என்.ஓ.ஏ.ஏ. அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதனை முன்னிட்டு அந்த பெரிய ஓட்டையில் இருந்து புறப்பட கூடிய, மணிக்கு 2.9 லட்சம் கிலோ மீற்றர் வேகத்தில் வீச கூடிய சூரிய காற்றானது பூமியை நோக்கி வரும் என்றும் அது வருகின்ற வெள்ளிக்கிழமை நடைபெறும் என்றும் நெறள.உழஅ.யர என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். 


தொடர்ச்சியாக சூரியனில் இருந்து வரும் ஆற்றல் நிறைந்த துகள்களால், பூமியின் காந்தபுலம், செயற்கை கோள்கள், கைத்தொலைபேசிகள் மற்றும் இணைய வலையமைப்பு போன்றவற்றுக்கு பாதிப்பு ஏற்பட கூடும் என்றும் தெரிவித்துள்ளது. 


இந்த சூரிய காற்று அல்லது புவிகாந்த புயல்கள், விண்வெளியில் உடனடியாக பரவுவதற்கு கரோனா ஓட்டை அனுமதிக்கின்றது. 


தற்போது ஏற்பட்டுள்ள இந்த கரோனா ஓட்டை அளவில் 3 லட்சம் கிலோ மீற்றர் முதல் 4 லட்சம் கிலோ மீற்றர் வரை பரந்து விரிந்துள்ளது. 


இதன்படி, 20 முதல் 30 பூமிகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக வைக்கப்பட்டால் எவ்வளவு பெரிதோ அந்த அளவுக்கு உள்ளது என்று நாசாவின் அறிவியல் பிரிவை சேர்ந்த அலெக்ஸ் யங் என்பவர் கூறியுள்ளார். 


தற்போது ஆய்வாளர்கள் கூறிய விஷயம் அறிவியல் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »