வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தங்களது வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சில தொழில்துறைகளில் ஈடுபட்டு வருபவர்கள் தங்களது வருமானத்தை மறைத்து தொடர்ச்சியாக வரி செலுத்துவதிலிருந்து தப்பித்து வருவதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.