ஹாலிஎல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாலிஎல போகொட பகுதியில் மழை நீர் வடிந்தோடும் வடிகானில் விழுந்த 10 மற்றும் 8 வயதுடைய இரண்டு சிறுவர்கள் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று பெய்த கடும் மழையின் காரணமாக போகொட கொட்டியாமலுவ பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து வடிகானுக்கு அப்பால் உள்ள வீட்டுக்கு செல்ல வடிகானை கடக்கும் போது, அவர்கள் அதில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குறித்த இரண்டு சிறுவர்களும் போகொட வித்தியாலயத்தில் தரம் ஐந்து மற்றும் தரம் இரண்டில் கல்வி கற்கும் சகோதரர்கள் ஆவர்.
வடிகானில் சுமார் 100 மீற்றர் தூரத்தில் செருப்பும், சாரமும் , சிறிய கூடை பை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹாலிஎல பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து சிறுவர்களை தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.