Our Feeds


Monday, March 20, 2023

SHAHNI RAMEES

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு...!

 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பரிசுப்பொருள் மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது. அத்துடன் பெண் நீதிபதியை மிரட்டியதாக மற்றொரு வழக்கும் பதிவாகியுள்ளது. 



இந்த வழக்குகளில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், இஸ்லாமாபாத் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வரும் பரிசுப்பொருள் மோசடி வழக்கின் விசாரணைக்கு நேற்று முன்தினம் அவர் ஆஜராகி இருந்தார். 



முன்னதாக அவரை கைது செய்ய லாகூரில் உள்ள அவரது பங்களாவுக்கு 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொலிஸார் சென்றனர். 



அப்போது இம்ரான்கானின் பி.டி.ஐ. கட்சியினருக்கும், பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 25-க்கு மேற்பட்ட பொலிஸார் காயமடைந்தனர். 



இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் இம்ரான்கான் மீது பொலிஸார் நேற்று பயங்கரவாத வழக்கு ஒன்றையும் பதிவு செய்தனர். 



இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைப்போல இம்ரான்கான் வீட்டில் நடந்த வன்முறை தொடர்பாக, அவரது கட்சித்தலைவர்கள் சுமார் 17 பேர் உட்பட ஏராளமான தொண்டர்கள் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக சுமார் 18 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »