கொழும்பு, பம்பலப்பிட்டி பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்துவரும் பெண்ணிடமிருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் ஒன்றரை மாத குழந்தை புத்தளம் வனாத்தவில்லுவ பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் குழந்தையை கடத்திச் சென்றதாக கூறப்படும் 53 வயதுடைய பெண் மற்றும் குழந்தையின் தாய் உட்பட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த யாசகம் பெறும் பெண் பம்பலப்பிட்டி பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், குழந்தையில்லாத பெண்ணொருவர், யாசகம் பெறும் தாயிடமிருந்து குழந்தையை பெற்றுக்கொள்வதற்காக 1 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெருவில் வசித்து வந்த இந்த யாசகம் பெறும் பெண்ணின் ஒன்றரை மாதக் குழந்தையை அவர் தத்தெடுக்க குழந்தையைத் தேடிக்கொண்டிருந்தபோது, வனாதவில்லுவையைச் சேர்ந்த ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதலில் தாயும் அந்த பெண்ணிடம் குழந்தையை கொடுக்க சம்மதித்ததாகவும், பணத்தை பெற்ற பிறகு குழந்தையை கொடுக்க மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன் பிரகாரம் குறித்த பெண் குழந்தையை யாசக பெண்ணுடன் சென்று ஆடைகளை எடுத்துச் சென்ற நிலையில் மீண்டும் கொம்பஞ்சாவிடி பிரதேசத்தில் குழந்தையை கேட்ட போதும் அதற்கு தாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர், சந்தேகநபர்கள் குழந்தையை கடத்திச் செல்வதாகக் கூறி, குழந்தையை, தாயையும் தள்ளிவிட்டு முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றுள்ளார்.
இதன்போது வனாத்தவில்லு பிரதேசத்தில் பெண்ணுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சிசு தற்போது பொரளை சீமாட்டி சிறுவர் வைத்தியசாலைக்கு வைத்திய பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.