உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பான இரண்டு நாள் விவாதம் நாளை (9) மற்றும் நாளை மறுநாள் (10) நாள் முழுவதும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் விவாதம் நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் பாராளுமன்ற நிலையியற் குழுவில் கோரிக்கை விடுத்த நிலையில், அதன்படி அடுத்த இரண்டு நாட்களும் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இரண்டு நாட்களாக பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.