உள்ளூராட்சி மன்றத் தேர்தலை குறிக்கும் திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த தேர்தல் பல்வேறு காரணங்களால் பிற்போடப்பட்டது.
இந்தநிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது.
இதன்படி புதிய வர்த்தமானி அறிவிப்பு அனைத்து மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளாலும் வெளியிடப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது