Our Feeds


Thursday, March 30, 2023

ShortNews Admin

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்ட சாணக்கியன் உள்ளிட்ட குழுவினர்!



மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமாக காணிகளை அபகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், வியாளேந்திரன் உள்ளிட்ட கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.


இதன்போது, வாகனேரி வயலை குறி வைத்துள்ள பிள்ளையானுக்கும், பிரதேச செயலகத்தினருக்கும் எதிர்ப்பு தெரிவித்தும், தமது வயல் காணிகளை விட்டுக்கொடுக்க முடியாது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிள்ளையானுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர்.

பிரதேச செயலகத்தால் குறித்த வயல் காணி அபகரிக்கப்பட்டு, சோளர் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு நடந்தால் அவ்விடத்திலேயே நஞ்சருந்தி உயிரை மாய்ப்பதாகவும் போராட்டக்காரர்கள் எச்சரிக்கின்றனர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »