ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி பதவிக்கு நியமிக்குமாறு பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்க்ஷ யோசனை தெரிவித்ததாக இராஜாங்க அமைச்சர் இந்திக அநுருத்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர் என்பதலால் ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிப்பதில்லை என பொதுஜன பெரமுன தீர்மானித்தது.
ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிப்பதற்கான சகல செயற்பாடுகளையும் பசில் ராஜபக்ஷவே மேற்கொண்டதாகவும் இராஜாங்க அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.