சிறுபோகச் செய்கைக்கான நீரை திறந்துவிடும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான நீர்த்தேக்கங்களில் தற்போது 67 வீதத்திற்கும் அதிகமான நீர் கொள்ளளவு இருப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் காரணமாக சிறுபோகத்திற்கு தேவையான நீரை போதியளவு திறந்து விட முடியும் எனவும் நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.