Our Feeds


Friday, March 24, 2023

News Editor

கஞ்சாவை விற்க முயன்ற இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல்


 கஞ்சாவை விற்பனை செய்ய முயன்றதாக சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்ட இரு பொலிஸ் அதிகாரிகளும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


பளை பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர், பியகம மதுவரி திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.


மதுவரி திணைக்களத்தினர் நடத்திய சோதனையில், அவர்களிடம் இருந்து 2 கிலோ 250 கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருந்து.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »