கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படுகின்ற கல்சியம் மற்றும் இரும்புச் சத்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு இல்லை என அரச குடும்பநல சுகாதார உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது வரையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அவசியமான மருந்துகள், இரண்டு மாதங்களுக்கு போதிய அளவில் உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவி தேவிகா கொடித்துவக்கு எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
அனைத்து சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையிலும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் கல்சியம் மற்றும் இரும்புச் சத்து மாத்திரைகள் தேவையான அளவு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.