Our Feeds


Friday, March 17, 2023

ShortNews Admin

வயிற்று வலிக்கு மருந்தெடுக்க வந்த பெண்ணிடம் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என பயமுறுத்தி பணம் பெற்ற வைத்தியசாலை ஊழியர்



பலாங்கொட  வைத்தியசாலைக்கு வயிற்று வலிக்காக சிகிச்சை பெற்று வந்த யுவதி கர்ப்பமாக இருப்பதாக கூறி பணம் பெற்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


குறித்த யுவதிக்கு கருக்கலைப்பு செய்வதற்காக பலாங்கொட ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் யுவதியின் பாட்டியிடம் 43,000 ரூபாவை மோசடி செய்துள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


பலாங்கொட தெனகமவத்தை பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவரும் திருமணமாகாத பாதிக்கப்பட்ட யுவதியும் இணைந்து இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.


யுவதியின் தாய் வெளிநாட்டில் இருப்பதாகவும், அவர் தனது பாட்டியுடன் வசித்து வருவதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.


குறித்த யுவதிக்கு பல தடவைகள் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளதுடன், சிகிச்சைக்காக பலாங்கொட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


இந்நிலையில், பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் பணிப்பெண், பாட்டியிடம், இந்த யுவதிக்கு குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாகவும், அதனை நீக்க மருந்து கொடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


யாருக்கும் தெரியாமல் ரகசியமாக, தன்னால் செய்ய முடியும் என்றும் அதற்கு 43,000 ரூபாய் வழங்குமாறும் கூறியுள்ளார். 


யுவதிக்கு சில மருந்து மாத்திரமே வழங்கப்பட்டதாகவும் அதன் பின்னர் வயிற்று வலி குணமாகியதாகவும் பாட்டி குறிப்பிட்டுள்ளார்.


பாட்டி முறைப்பாடு


வயிற்று வலிக்காக சிகிச்சைக்கு சென்ற யுவதிக்கு அதிர்ச்சி | Treatment For Stomachache Women Shocked


பின்னர் அந்த யுவதி கர்ப்பமாக இல்லை என்பதை அறிந்ததாகவும் பாட்டி முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.


வயிற்று வலிக்கு சிகிச்சை பெற வந்த போது, கர்ப்பமாக இருப்பதாக பயமுறுத்தி 43,000 ரூபாவை மோசடி செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.


இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த பணிப்பெண்ணை கைது செய்யுமாறு பலாங்கொட பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் தமித் ஜெயக்கொடியின் அறிவுறுத்தலின் பேரில் பொலிஸ் பரிசோதகர் நயனகாந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »