Our Feeds


Tuesday, March 14, 2023

News Editor

அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு புதிய பதவி


 இலங்கை - ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


09ஆவது பாராளுமன்றத்தின் இலங்கை - ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்திற்கான நிர்வாகிகளைத் தெரிவு செய்வதற்கான விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் இடம்பெற்ற போதே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் தூதுவர் டெனிஸ் சைபி இதன்போது விசேட விருந்தினராக கலந்து கொண்டதுடன், இந்நிகழ்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவும் கலந்து கொண்டார்.


இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான உபுல் கலப்பதி, ஹெக்டர் அப்புஹாமி ஆகியோர் இலங்கை - ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய செயலாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »