கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வவுனியா மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் மார்ச் மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவர் இன்று (20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.