Our Feeds


Wednesday, March 15, 2023

News Editor

ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி


 சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பாரிஸ் கழகம்,  ஜப்பான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் அரசாங்கம் பாரிய சீர்திருத்தங்களை ஏற்கனவே அமுல்படுத்தியுள்ளதாக இலங்கையின் உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குனர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை ஒழுங்குபடுத்துவதற்கு முன்னர் கடன் வழங்குநர் குழுவுடன் இணக்கம் காணப்பட்ட எந்தவொரு கடன் நிபந்தனைகள் தொடர்பிலும் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுவதில் தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

கடன் வழங்குநருக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் நோக்கில், இலங்கை எந்தவொரு கடன் வழங்குநருடனும் இடைக்கால உடன்படிக்கையில் ஈடுபடவில்லை எனவும் ஜனாதிபதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »