அகில இலங்கை ஐக்கிய தனியார் ஊழியர் சங்கத்தின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் இவருக்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
தனியார் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியர்களின் தொழில்முறை உரிமைகளுக்காக முன்வருதலுக்கும், அவர்களை வலுவூட்டுவதற்கும் பலப்படுத்துவதற்கும் அகில இலங்கை ஐக்கிய தனியார் ஊழியர் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதோடு, ஹிருணிகா பிரேமச்சந்திர அதன் முதலாவது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.