பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு எதிர்காலத்தில் வாழ்க்கைச் செலவு மேலும் குறைவடையும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இக்கட்டான காலங்களை கடந்து நாடு நம்பகமான நிலைக்கு வந்துகொண்டிருப்பதாக மஹரகமவில் நேற்று (26) நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நாட்டின் பொருளாதாரம் சரியான முறையில் நிர்வகிக்கப்பட்டால், மீண்டும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டிய அவசியம் இருக்காது என தெரிவித்தார்.