இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் மீண்டும் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று (30) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுண் (22 கரட்) தங்கத்தின் விலை 163,800 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதனிடையே, (24 கரட்) தங்கம், ஒரு பவுண் விலை 178,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக தெரியவருகிறது.