கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் இந்த வாரம் முன்னிலையாகுமாறு பல அரச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளைய தினம் மத்திய கலாசார நிதியம் மற்றும் இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபன அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், நாளை மறுதினம் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனமும், எதிர்வரும் 9ஆம் திகதி மறுசீரமைப்பு ஆணைக்குழுவும் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளன.