பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அனைத்து பாகிஸ்தான் தொலைக்காட்சி ஊடகங்களில் இருந்தும் தடை செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பிறகு வெறுப்புணர்வை ஏற்படுத்திய பேச்சுதான் இதற்குக் காரணம்.
இம்ரான்கானின் வெறுக்கத்தக்க பேச்சு சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கும், பொது ஒழுங்கைப் பாதுகாப்பதற்கும் பங்கம் விளைவிக்கும் என்பதால் பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், அவர் தனது சொத்து விவரங்களை தெரிவிக்காதது தொடர்பான முறைப்பாட்டை விசாரிக்கத் தவறியதற்காக பாகிஸ்தான் நீதிமன்றம் அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்துள்ளது.