இந்தோனேசியா நாட்டின் தெற்கு பபுவா மாகாணம் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான மிகப்பெரிய எரிபொருள் சேமிப்பு கிடங்குள்ளது.
இந்தோனேசியாவின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையில் 25 சதவிகிதம் இங்கிருந்து தான் விநியோகிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இந்த சேமிப்பு கிடங்கில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த கோர தீ விபத்தில் சேமிப்பு கிடங்கில் இருந்த எரிபொருள் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மேலும், காயமடைந்த பலர் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்து 52 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 250-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கனமழை காரணமாக எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதில் மின்னல் தாக்கியதில் தீ பிடித்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
தீயணைப்பு, மீட்புப்பணிகள் தொடந்து இடம்பெற்று வருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.