(எம்.நியூட்டன்)
இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் தலைவர் மற்றும் செயலாளர் கட்சியின் யாப்பு விதி முறைகளுக்கு அமையவே தெரிவு செய்யப்படுவார்கள்.
யாரும் அவசரப்படுவதால் பயன் இல்லை என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இரு பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்வைக்கப்படுவதாக கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் தலைவர் மற்றும் செயலாளர் விதிகளுக்கு அமைவாக தெரிவு செய்யப்படுவார்கள். இப்போது யாருக்கும் அந்தப் பிரச்சினைத் தொடர்பில் சந்தேகம் எழுந்திருக்கவில்லை.
தமிழரசுக்கட்சியின் கிளைகள் அமைப்பது தொடர்பான வேலைகள் முடிந்தவுடன் விரைவில் மாநாடு நடைபெறும். அந்தமாநாட்டில் யார் எந்தந்த பொறுப்புகளுக்கு வருவார்கள் என்பது தொடர்பில் தெரிவுசெய்யப்படுவார்கள்.
அந்த மாநாட்டின் பொது அந்தப் பொதுக்குழுவுக்கு எந்தந்த பதவிகளுக்கு யார் யார் வரவிரும்புகின்றார்கள் என்பதை அமைப்பு விதிகளின் படி விண்ணப்பம் செய்வார்கள்.
அப்போது நாங்கள் இனக்க அடிப்படையில் அதற்குப் பொருத்தமான ஒவ்வொருவரின் பெயர்களையும் ஆதரவுகளைத் தெரிவித்து தீர்மானம் செய்வோம். இதுவே நடைமுறை ஜனநாயக முறையாகும். இதனைவிடுத்து யாரும் அவசரப்படுவதைப்பற்றி எனக்குத் தெரியாது என்றார்.